×

ஆஸ்திரேலியாவில் விசா ரத்து சர்ச்சை: ஆதரவளித்த ரசிகர்களுக்கு ஜோகோவிச் நன்றி

மெல்போர்ன்: நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், வரும் 17ம்தேதி முதல் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க மெல்போர்ன் சென்றுள்ளார். ஆனால் அவர் கொரோனா தடுப்பூசி போடாததால் அவரின் விசாவை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. இதனை எதிர்த்து ஜோகோவிச் தொடர்ந்துள்ள வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் வரும் 10ம்தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதன் தீர்ப்பை பொறுத்துதான் அவர் ஆஸி. ஓபனில் விளையாட முடியும். அதனை எதிர்பார்த்து மெல்போர்ன் ஓட்டலில் அவர் தங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் மெல்போர்ன் மற்றும் செர்பியாவில் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் சர்ச்சைகளுக்கு மத்தியில், நோவக் ஜோகோவிச் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடினமான நேரத்தில் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. என்னால் அதனை உணர முடிகிறது, அது மிகவும் பாராட்டப்படுகிறது, என பதிவிட்டுள்ளார்….

The post ஆஸ்திரேலியாவில் விசா ரத்து சர்ச்சை: ஆதரவளித்த ரசிகர்களுக்கு ஜோகோவிச் நன்றி appeared first on Dinakaran.

Tags : Australia ,Djokovich ,Melbourne ,Serbia ,17th Australia Open ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவை சுருட்டி ஆப்கானிஸ்தான்...