×

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுடன் விரைந்து புலன் விசாரணை நடத்த அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை: காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா எழுதியுள்ள கடிதத்தில், காவல் துறையினர் புலன் விசாரணை செய்யும் பல கடுமையான வழக்குகளில் கூட சட்டவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில்லை. இதனால் குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளிவருகிறார்கள்.காலவரையறைக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாததால் வழக்குகள் ரத்தாகின்றன. புலன் விசாரணை அதிகாரிகளை கண்டித்தும் நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிக்கின்றன.

உரிய காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்திருந்தால், இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்திற்காக, தொடர் குற்றங்கள் மற்றும் கடுமையான குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் ஜாமீனில் வெளிவருகிறார்கள். உரிய காலத்திற்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் வழக்குகள் ரத்து செய்யப்பட்டு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாவதையும் தவிர்க்க முடியும். எனவே, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தவுடன் புலன் விசாரணையை விரைந்து முடித்து, சட்டவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை அதிகாரிகளுக்கும், அவர்களை கண்காணிக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், காவல் துறை ஆணையர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

The post எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுடன் விரைந்து புலன் விசாரணை நடத்த அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Criminal Prosecutor ,DGP ,CHENNAI ,Asan Mohammad Jinnah ,Director General of Police ,Shankar Jiwal ,Dinakaran ,
× RELATED காவலர்களை வீட்டு வேலைக்குப்...