×

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

சென்னை: சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய (Consultant/Specialist) அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது. சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (Consultant/Specialist) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள். மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in – ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (What’s App Number: 6379179200) (044-22505886/044-22502267). அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in – ல் நேரிடையாக பதிவு செய்து இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ministry of Saudi Arabia ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...