×

உலக செஸ் சாம்பியன்ஷிப் ரூ.20 கோடியே 80 லட்சம் யாருக்கு? சாம்பியன் ஆவாரா தமிழக வீரர் குகேஷ்

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 14வது சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லீரனும், தமிழக வீரர் குகேசும் தலா 6.5 புள்ளிகள் பெற்று உள்ளனர். இதனை அடுத்து 14வது சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் ஒரு புள்ளியைப் பெற்று ஏழரைப் புள்ளிகளை அடைந்தால் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விடுவார். இரு வீரர்களும் போட்டியை சமனில் முடித்தால் இருவருமே 7 புள்ளிகளை பெற்று இருப்பார்கள். இதன் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக் சுற்று நடைபெறும். ஒரு வேலை டிரா ஆனால் 13ம்தேதி இந்த ஆட்டங்கள் நடைபெறும். முதலில் ராபிட் ரவுண்டில் வெற்றியாளர்களை தீர்மானிக்க பார்ப்பார்கள். இதில் மொத்தம் நான்கு சுற்றுகள் நடைபெறும்.

இதில் இரு வீரர்களுக்கும் தலா 15 நிமிடம் வழங்கப்படும். ஒவ்வொரு நகர்த்தலுக்கும் பத்து வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும். இதில் யார் முதலில் இரண்டரை புள்ளிகள் பெறுகிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்களாக தீர்மானிக்கப்படுவார்கள். அந்த போட்டியும் சமநிலையில் முடிந்தால், அதன் பிறகு மினி ராபிட் ரவுண்டு நடைபெறும். இதில் 2 கேம் நடைபெறும். ஒவ்வொரு வீரருக்கும் தலா பத்து நிமிடங்கள் தரப்படும். இதில் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 5 வினாடிகள் வழங்கப்படும். இதில் யார் ஒன்றரை புள்ளிகளை முதலில் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். இந்த சுற்றும் சமனில் முடிவடைந்தால் பிலிட்ஸ் மேட்ச் நடைபெறும். இதில் மொத்தம் இரண்டு கேம்கள் நடைபெறும்.

ஒவ்வொரு வீரருக்கும் தலா மூன்று நிமிடங்கள் கொடுக்கப்படும். இதில் யார் புள்ளிகளை முதலில் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். இந்தப் போட்டியும் சமனில் முடிவடைந்தால் அதன் பிறகு சடன் டெத் (sudden death) என்ற முறைப்படி மூன்று நிமிடம் போட்டிகள் நடைபெறும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படுவார்கள். இந்த தொடரில் மொத்தமாக 20 கோடியே 80 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரருக்கு தனியாக ஒரு கோடி ரூபாய் 67 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை பைடு யுடியூப் என்ற சேனலில் பார்க்கலாம்.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் ரூ.20 கோடியே 80 லட்சம் யாருக்கு? சாம்பியன் ஆவாரா தமிழக வீரர் குகேஷ் appeared first on Dinakaran.

Tags : CHESS ,Kukesh ,Singapore ,World Chess Championship Series ,Ding Leeran ,Kukese ,World Chess Championship ,Awara ,Dinakaran ,
× RELATED வெற்றி பெற்ற தருணம் உணர்வுபூர்வமாக...