×

ஆன்லைன் முதலீட்டு மோசடியில் கேரளாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளி கைது


சென்னை: ஆன்லைன் முதலீட்டு மோசடியில் கேரளாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு ஆன்லைன் முதலீட்டு மோசடியாகும். சைபர் குற்றவாளிகள் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களிடம் நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள். கடந்த 28.06.2024ம் தேதி 35 வயதுகுட்பட்ட மதுரையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பேஸ்புக் மூலம் ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வந்த விளம்பரத்தை நம்பி பணம் ரூ.52,66,417/- ஐ இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். மேற்கண்ட விளம்பரத்தை நம்பி அவர் சைபர் குற்றவாளிகள் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளார்.

இறுதியில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தான் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் போில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். இதுதொடர்பாக, மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண். 21/2024, U/s 420 IPC and 66(D) of ITA Act 2008 வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டு, மனுதாரர் எதிரிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளில நடைபெற்ற முறைகேடான பண பரிவர்த்தனைகளை விசாரணை செய்தனர்.

மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக 11.12.2024-ம் தேதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள “Zerv” என்ற ஸ்கிராப் நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கைத் திறந்த எதிரி அன்வர்ஷா, S/o. நவ்ஷத், காயாம்குளம், ஆழப்புலா மாவட்டம், கேரளா என்பவரை தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள், பாஸ்போர்ட் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட எதிரி சைபர் கிரைம் மூலம் பொதுமக்களை பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தொியவந்துள்ளது. இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.

பொதுமக்களுக்கான அறிவுரைகள்:
* இதுபோன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பாதீர்கள். பொதுமக்கள் இம்மாதிரியான மோசடிகளை கண்டால் உடனே சைபர்கிரைம் பிரிவையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்.

* அதிகப்படியான லாபம் தருவதாக அவர்கள் உறுதியளித்தால் அதில் மோசடிக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* முன்பின் தொியாத நபர்களுடன் தொலைப்பேசியில் உங்களின் தனிப்பட்ட அல்லது நிதி சம்மந்தப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.

* மோசடி செய்பவர்கள் அவசர சூழ்நிலையை உருவாக்கி நம்மை சிந்திக்க நேரம் கொடுப்பதில்லை. அதனால் அவர்களின் பேச்சை நம்பாமல் எந்தவொரு நடவடிக்கை எடுப்பதற்கு முன் உங்களின் நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை அணுகுங்கள்.

* இணைய வழி மோசடிகள் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஏமாற்றும் உத்திகள் பற்றி தொடா;ந்து தொிந்து கொள்ளுங்கள். இம்மாதிரியான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்.

* உங்களின் வங்கி கணக்குகள் மற்றும் லோன் கணக்குகள் ஆகியவற்றில் ஏதேனும் அங்கீகிகாிக்கப்படாத பணப்பாிவர்த்தனைகள் ஏதும் நடைபெற்றுள்ளதா என தொடர்ந்து கண்காணியுங்கள்.

* முக்கியமாக Two factor authentication – ஐ பயன்படுத்துங்கள்.

* மேலும் பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்குகள் மற்றும் கிரிப்டோ கரன்சி வேலட்டுகள் மற்றவர்களின் பயன்பாட்டிற்கு கடனாக கொடுப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனென்றால் அத்தகைய கணக்குகள் சைபர் குற்றவாளிகளால் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்வதற்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் செய்வதற்கு: இதுபோன்ற பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும்.

The post ஆன்லைன் முதலீட்டு மோசடியில் கேரளாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chennai ,Dinakaran ,
× RELATED புளியரையில் கலெக்டர், எஸ்பி தீவிர...