×

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஜனவரி 8 ஆம் தேதி விசாரணை: உயர் நீதிமன்றம்

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஜனவரி 8 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகை நயன்தாரா திருமண ஆவண படத்திற்கு நடிகர் தனுஷின் வண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

அனுமதியின்றி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே நடிகை நயன்தாராவிற்கு தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டிஸிற்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையானது தென்னிந்திய திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகை நயன்தாராவிற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்ய வண்டர்பார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி இருந்தனர். இதனை அடுத்து அனுமதி இன்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும் காட்சிகளை பயன்படுத்த தடைவிதிக்க கோரியும் வண்டர்பார் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அத்தகைய வழக்கு நீதிபதி அப்துல் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிலிக்ஸ் உரிய பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தாக்கல் செய்யப்படும் அந்த பதில் மனுவுக்கு தனுஷ் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் காட்சிகளை பயன்படுத்த தடை கேட்டு நெடுங்கால நிவாரணம் தொடர்பாக ஜனவரி 8 ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டு இந்த வழக்கை தள்ளிவைத்தார்.

The post நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஜனவரி 8 ஆம் தேதி விசாரணை: உயர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Dhanush ,Nayanthara ,Chennai ,Chennai High Court ,High Court ,
× RELATED விக்னேஷ் சிவனை திருமணம் செய்திருக்க கூடாது: நயன்தாரா வேதனை