×

கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை செயல்பாட்டை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்: தொழிலாளர் நலத்துறை செயலர் அறிவுறுத்தல்

சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனையின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தொழிலாளர் நலத்துறை செயலர் வீரராகவராவ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையரகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் வீர ராகவராவ் தலைமையில் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் முன்னிலையில் தொழிலாளர் துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தொழிலாளர்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்குமாறும், பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்து நிதி உதவி வழங்கிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், வெளிமாநில கட்டுமான தொழிலாளர்களை இந்த வாரியத்தில் பதிவு செய்யுமாறும் அதிகாரிகளிடையே தொழிலாளர் நலத்துறை செயலர் வீரராகவராவ் கேட்டுக்கொண்டார். அதேபோல், இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் அமைப்பு சாரா நலவாரியத்தில் அதிக அளவில் பதிவு செய்யுமாறும், கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை உரிய முறையில் செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கிட உரிய பயனாளிகளை கண்டறியுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இதில், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய செயலாளர் திவ்வியநாதன், தமிழ்நாடு கட்டுமான கழக இயக்குநர் தர்மசீலன், அனைத்து கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மற்றும் தொழிலாளர் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை செயல்பாட்டை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்: தொழிலாளர் நலத்துறை செயலர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Labor ,CHENNAI ,Labor Welfare Secretary ,Veeraragavarao ,Commissionerate ,Chennai, Thenampet ,Secretary of State ,Labor Welfare and Skill Development ,Veera Raghavrao ,
× RELATED அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில்...