×

ஊட்டி ரோஜா பூங்காவில் மலர் செடிகளுக்கு மருந்து கலந்த தண்ணீர் தெளிப்பு பணி துவக்கம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவிற்கு செல்கின்றனர்.

இங்குள்ள 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பூக்கும் பல வண்ண ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம். பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த ரோஜா செடிகளலி் மலர்கள் அதிகம் காணப்படும். மற்ற சமயங்களில் மலர்கள் குறைந்தே காணப்படும்.

பொதுவாக டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இந்த மலர் செடிகளில் ரோஜா மலர்கள் அரிதாகவே காணப்படும். இம்முறை உறை பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டதாலும், கடந்த மாதம் சில தினங்கள் மழை பெய்த நிலையில், தற்போது பெரும்பாலான செடிகளில் மலர்கள் காணப்படுகிறது. கோடை காலம் வரை இந்த மலர் செடிகள் பாதிக்காமல் இருக்கவும், மலர்களுடன் காட்சியளிக்கும் தற்போது பூங்கா ஊழியர்கள் இந்த ேராஜா செடிகளுக்கு மருந்து கலந்த தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஊட்டி ரோஜா பூங்காவில் மலர் செடிகளுக்கு மருந்து கலந்த தண்ணீர் தெளிப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty Rose Park ,Ooty ,Nilgiris district ,Rose Park ,Ooty Vijayanagaram ,
× RELATED ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில்...