அரூர் : அரூர் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரூர் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளாலும், சாலையோரங்களில் மேய்ச்சலுக்காக கட்டப்படும் மாடு, எருமைகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக அரூரில் திருவிக நகர், பஸ்நிலையம், தில்லை நகர், பைபாஸ் சாலை, பாட்சாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளின் உரிமையாளர்கள் மாடுகளை மேய்ச்சலுக்காக பகல் நேரங்களில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். கால்நடைகள் தாமாக வீதிவீதியாக சுற்றி விட்டு மாலை நேரங்களில் உரிமையாளர் வீடுகளை சென்றடைகிறது.
கட்டுப்படுத்த ஆள் இல்லாமல் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அரூர் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.