×

நாகர்கோவிலில் என்.சி.சி. மாணவர்கள் பயிற்சி முகாம்

*500 பேர் பங்கேற்பு

நாகர்கோவில் : கன்னியாகுமரி, மதுரை விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உள்பட தென் மண்டல அளவிலான என்.சி.சி. பயிற்சி முகாம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. 20 பள்ளிகள் மற்றும் 20 கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

10 நாட்கள் பயிற்சி முகாமில், நாள்தோறும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி, கலைத்திறன் மேம்பாட்டு பயிற்சி, மருத்துவ பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடந்து வருகின்றன.

11 வது பட்டாலியன் கமாண்டர் உன்னி கிருஷ்ணன் தலைமையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று துப்பாக்கியுடன் கவாத்து பயிற்சி நடைபெற்றது. துப்பாக்கிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளித்தனர். அடுத்த கட்டமாக துப்பாக்கி சுடும் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் 13ம்தேதி நிறைவடைகிறது.

The post நாகர்கோவிலில் என்.சி.சி. மாணவர்கள் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : NCC ,Nagercoil ,Kanyakumari ,Madurai ,Virudhunagar ,Tenkasi ,Tirunelveli ,South ,Zone NCC ,Scott Christian College ,Nagercoil NCC ,
× RELATED திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரியில் தன்னார்வ தொண்டர்கள் தினம்