புதுடெல்லி: உலக செஸ் சாம்பியன் போட்டிகள் 14 சுற்றுகளாக, நடப்பு சாம்பியனும், சீன கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரென், இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே 14 சுற்றுகளாக நடந்து வருகின்றன.12 சுற்று முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் ஆட்டம் குறித்து 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் கூறியதாவது:
குகேஷ்- லிரென் மோதும் போட்டிகள் உலக சாம்பியன் பட்டத்துக்கு ஆடுவது போல் இல்லை. ஓபன் டோர்னமென்டின் 2 அல்லது 3வது சுற்று போட்டி போல் இவர்கள் ஆடுகின்றனர். இவர்களின் காய் நகர்த்தல்கள் மிக மோசமாக உள்ளன. குகேஷ் அவரது பாய்ன்ட் அட்வான்டேஜை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவே இல்லை. லிரென், செஸ் போர்டில் உள்ள காய்களின் நிலைக்கு ஏற்ப சாதாரண ஆட்டத்தை ஆடுகிறார்.
மொத்த போட்டியகளிலும், துல்லியமாக திட்டமிட்டு காய்களை அவர் நகர்த்தவில்லை. எதிராளிக்கு இக்கட்டான தருணங்களை தந்தால்தான் அவர் தவறு செய்வார். குகேஷின் ஆட்டம் எதிராளி எளிதில் வெல்லக்கூடியதாக உள்ளது. இருவரில் லிரெனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post குகேஷ் – லிரென் செஸ் ரொம்ப மோசமா ஆடறாங்க…வறுத்தெடுத்த கார்ல்சன் appeared first on Dinakaran.