×

பவன் கல்யாண் அண்ணன் அமைச்சராகிறார்

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பவன் கல்யாண் அண்ணனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பீடா மஸ்தான்ராவ், சனா சதீஷ், பாஜவை சேர்ந்த ஆர்.கிருஷ்ணய்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜனசேனா கட்சியின் பொதுச்செயலாளர் நடிகர் பவன்கல்யாணின் அண்ணனான கொனிடலா நாகபாபுவை மாநில அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள உள்ளதாக முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post பவன் கல்யாண் அண்ணன் அமைச்சராகிறார் appeared first on Dinakaran.

Tags : Bawan Kalyan ,Thirumalai ,Annan ,Bhavan Kalyan ,AP ,Chandrababu Naidu ,Rajya Sabha elections ,Pita Mastanrao ,Telugu Desam Party ,Sana ,Bhavan Kalyan Annan ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...