×

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்துக்களை விற்க அனுமதி

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு பிரபல தொழில் அதிபர் மெகுல் சோக்சி கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பி ஓடி விட்டார். தற்போது அவர் ஆண்டிகுவாவில் வசித்து வருகிறார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து ெமகுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.2565.90 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது.

தற்போது மும்பை சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்க அமலாக்கத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி ரூ.2565 கோடி மதிப்புகள்ள சொத்துக்கள் விற்கப்படுகின்றன. இதில் கிழக்கு மும்பை சாண்டாக்ரூஸில் கெனி டவரில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளும், டெல்லி மஹர்ஷத்ராவில் உள்ள சாண்டாக்ரூஸ் எலக்ட்ரானிக் எக்ஸ்போர்ட் பிராசஸிங் மண்டலத்தில் அமைந்துள்ள இரண்டு தொழிற்சாலைகளும் அடங்கும்.

The post ரூ.14 ஆயிரம் கோடி மோசடி மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்துக்களை விற்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Mehul Choksi ,New Delhi ,India ,Punjab National Bank ,Antigua.… ,Dinakaran ,
× RELATED ஓடிபி இல்லாமல் ஹேக்கிங் வாட்ஸ்...