மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. ஆஸ்திரேலியாவை விடவும் இந்திய அணிக்கு இந்த கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த தொடரை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். இன்னும் 3 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி அவை அனைத்திலும் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இந்திய அணி வலுவான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கு வரும் டெஸ்ட் போட்டிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணம் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது தான். ஒரு இன்னிங்ஸில் 300 முதல் 350 ரன்கள் வரை பேட்ஸ்மேன்கள் எடுத்துக் கொடுத்தால் மட்டுமே, பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எதிரணியின் விக்கெட்டுகளை சாய்க்க முடியும். பந்துவீச்சில் இந்திய அணி மோசமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது.
The post வெற்றி வசப்பட வலுவான பார்ட்னர்ஷிப் அவசியம்: இந்திய அணிக்கு ஹர்பஜன் அட்வைஸ் appeared first on Dinakaran.