புதுச்சேரி : புதுச்சேரி காவல் துறையில் போலீசாருடன் இணைந்து ஊர்க்காவல்படை வீரர்களும் திறம்பட பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு 500 ஊர்க்காவல் படை வீரர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கோரிமேடு பயிற்சி பள்ளி வளாகத்தில் பரேடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அங்கேயே அவர்கள் 3 மாதம் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை மட்டுமே கோரிமேடு காவலர் மைதானம் அருகே பயிற்சி ஊர்க்காவல்படை வீரர்களுடன் பெற்றோர் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று மாலை ஊர்க்காவல்படை வீரர்களுடன் அவர்களது பெற்றோர்கள் சந்தித்து பேசி மகிழ்ந்தனர். மேலும், வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த உணவு மற்றும் தின்பண்டங்களை தங்களது பிள்ளைகளுக்கு பரிமாறினர்.
The post வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி ஊர்க்காவல்படை வீரர்களுடன் பெற்றோர் சந்திப்பு appeared first on Dinakaran.