- ஊட்டி அர்போரேட்டம்
- ஊட்டி
- ஆர்போரேட்டம்
- தோட்டக்கலை துறை
- நீலகிரி
- ஊட்டி அரசு தாவரவியல்
- தோட்டத்தில்
- ரோஜா பூங்கா
- குன்னூர் சிம்ஸ் பார்க்
- காட்டேரி பூங்கா
- தின மலர்
ஊட்டி : அண்மையில் பெய்த மழை காரணமாக ஊட்டி மரவியல் பூங்கா பசுமையாக காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ஊட்டி மரவியல் பூங்கா மற்றும் தேயிலை பூங்கா ஆகியவை உள்ளன. ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் இப்பூங்காக்களை பார்த்து செல்வது வழக்கம். ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில் பஸ் நிலையத்திற்கு பின்புறம் மரவியல் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் பல்வேறு அரிய வகை மரங்கள் உள்ளன.
ஊட்டி நகருக்கு மிக அருகில் உள்ள இப்பூங்கா குறித்து சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இப்பூங்காவை மிக குறைந்த அளவில் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். புதுமண தம்பதிகள் மட்டும் திருமண புகைப்படங்கள் எடுக்க வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக இப்பூங்கா பசுமைக்கு திரும்பியுள்ளது. தற்போது பகல் நேரங்களில் வெயிலான காலநிலை நிலவுவதால் ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் வகையில் பூங்காவை பிரபலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post அண்மையில் பெய்த மழையால் பசுமையாக காட்சி தரும் ஊட்டி மரவியல் பூங்கா appeared first on Dinakaran.