×

4 கடைகளில் கொள்ளை முயற்சி

நெல்லை, டிச.10:அம்பாசமுத்திரம் பிரதான சாலையின் இருபுறமும் கேக் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. நேற்று காலை கடையை திறக்க முயன்ற போது கேக் கடை உள்ளிட்ட 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்தது கண்டு வியாபாரிகள் அம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அம்பை போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் இரும்பு ராடுகளால், கடைகளின் ஷட்டரையும், பூட்டுக்களை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. வியாபாரிகள் அனைவரும் அன்றைய கலெக்‌ஷன் பணத்தை கல்லா பெட்டியில் போடாமல் எடுத்துச்சென்றதால் அந்த பணம் தப்பியது. ஆனால் இச்சம்பவத்தில் முகமது முஸ்தபா என்பவரது கேக் கடையில் கல்லா பெட்டியில் இருந்த ரூ.1500ஐ மர்ம நபர்கள் திருடி தப்பினர். அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 4 கடைகளில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Nella ,Ambasamutram ,Dinakaran ,
× RELATED கேரளாவுக்கு அனுப்பிவைப்பு: நெல்லை...