×

துருக்கியில் பயங்கரம் நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: 5 ராணுவ அதிகாரிகள் பலி

அங்காரா: துருக்கியில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் 5 ராணுவ அதிகாரிகள் உயிர் இழந்தனர். துருக்கி நாட்டின் இஸ்பார்ட்டா மாகாணத்தில் நேற்று 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது ஹெலிகாப்டர்களும் நடுவானில் மோதின. இதில் ஒரு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், இருந்த ராணுவ பிரிகேடியர் ஜெனரல் உட்பட 5 அதிகாரிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். ஒருவர் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான இன்னொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது.

The post துருக்கியில் பயங்கரம் நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: 5 ராணுவ அதிகாரிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Turkey ,Ankara ,Navadan ,Isparta, Turkey ,Midwan ,Dinakaran ,
× RELATED துருக்கியில் ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து: 12 பேர் உயிரிழப்பு