×

பிசிசிஐ இடைக்கால செயலாளர் தேவஜித்

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் பிசிசிஐ புதிய செயலாளரை 45 நாட்களுக்குள் நியமிக்க வேண்டும். இந்நிலையில், பிசிசிஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைக்கியா நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன் பிசிசிஐ இணை செயலாளராக இருந்தவர். புதிய செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இப்பதவியில் தேவஜித் இருப்பார்.

The post பிசிசிஐ இடைக்கால செயலாளர் தேவஜித் appeared first on Dinakaran.

Tags : BCCI ,Devajith ,MUMBAI ,Jayshaw ,Board of Control for Cricket in India ,International Cricket Council ,ICC ,Devajit Saikia ,interim secretary ,Devajit ,Dinakaran ,
× RELATED ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட...