- காங்கிரஸ்
- மோடி
- இந்தியா
- புது தில்லி
- சோனியா
- ராகுல்
- ஜார்ஜ் சொரெஸ்
- OCCRB
- பாஜக
- மோடி அரசு
- எங்களுக்கு
- அதானி
- தின மலர்
புதுடெல்லி: அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ், ஓசிசிஆர்பி அமைப்பு ஆகியவற்றுடன் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இணைந்து இந்தியாவின் நன்மதிப்பை கெடுப்பதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா நேற்று கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து நாங்கள் தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க முயற்சித்து வருகிறோம். ஆனால் பிரதமர் மோடியால் அப்பிரச்னையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதானி பற்றிய பிரச்னையை எழுப்பும் போதெல்லாம் அவர் சுய கட்டுப்பாட்டை இழக்கிறார்.
இந்த விவகாரத்தில், அதானியை காப்பாற்ற அமெரிக்க அரசு, ஊடகத்துறையை கட்டுப்படுத்துவதாக பாஜ குற்றம்சாட்டுகிறது. அதுவும் மீடியாபார்ட் என்கிற ஊடகம் வெளியிட்ட அறிக்கையை திரித்து புதிய கதையை உருவாக்குகிறது. இந்த குற்றச்சாட்டை மீடியாபார்ட்டும், அமெரிக்க வெளியுறவுத்துறையும் மறுத்துள்ளன. இது அமெரிக்கா உடனான உறவை பாதிக்கச் செய்யும் விஷயம். இப்படி ஒரு நபருக்காக ஒரு தேசத்துடனான நமது உறவை பணயம் வைக்க யாருக்கும் உரிமை இல்லை. அதானிக்கு உதவும் நாடு (சீனா) நம் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்கள் ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடியே நேரடியாக சர்டிபிகேட் தருகிறார். பழங்காலத்து கதைகளில் வருவது போல ஒரு அரசனின் உயிர் கிளியின் உடலுக்குள் இருக்கும். அதுபோல அதானி எனும் கிளி ‘எம்’ என்கிற மோடியின் பாதுகாப்பில் இருக்கிறது. இதனால் அந்த கிளியை காப்பாற்ற மோடி எந்த எல்லைக்கும் செல்வார் என்றார்.
The post அதானியை காப்பாற்ற இந்தியா-அமெரிக்கா உறவை பணயம் வைக்கும் மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.