×

மணிப்பூருக்கு பிரதமர் மோடி எப்போது செல்வார்?.. அமைதியை நிலைநாட்டுவதில் பாஜக தோல்வி அடைந்துவிட்டது: காங்கிரஸ் கண்டனம்!!

டெல்லி: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. ஆனால் அதானி முறைகேடு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் முதல் வாரத்தில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், மக்களவையில் மணிப்பூர் மாநில கலவரம் குறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய், அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி எப்போது செல்வார்?. மணிப்பூர் கலவரம் குறித்தும் அதை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் அமைச்சர் அமித் ஷா எப்போது கூறுவார்?. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவைக்கு அமைச்சர் அமித் ஷா எப்போது அறிக்கை அளிப்பார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். மேலும், மணிப்பூரில் கலவரத்தை அடக்கி அமைதியை நிலைநாட்டுவதில் ஒன்றிய பாஜக தோல்வி அடைந்துவிட்டதாக கவுரவ் கோகோய் புகார் அளித்தார். பாஜக அரசின் தோல்வியில் இருந்து திசை திருப்பவே ஜார்ஜ் சோரஸ் பிரச்சனையை ஆளும் கட்சி எழுப்புவதாக கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து கோகோய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் குழப்பம் ஏற்பட்டது. குழப்பம் நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

The post மணிப்பூருக்கு பிரதமர் மோடி எப்போது செல்வார்?.. அமைதியை நிலைநாட்டுவதில் பாஜக தோல்வி அடைந்துவிட்டது: காங்கிரஸ் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Manipur ,BJP ,Congress ,Delhi ,Congress party ,Parliament ,Adani ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…