×

கடந்த 10 ஆண்டில் பொருளாதாரம் இரண்டு மடங்கு வளர்ச்சி: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ரைசிங் ராஜஸ்தான்’ உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாள் நடக்கும் இம்மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: இன்று உலகில் உள்ள ஒவ்வொரு நிபுணரும், முதலீட்டாளரும் இந்தியாவை மிக உற்சாகமாக பார்க்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 10வது பெரிய பொருளாதாரத்தில் இருந்து 5வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதே போல, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதியும் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது. சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்கிற மந்திரத்தை பின்பற்றுவதால் ஒவ்வொரு துறைகளும் வளர்ச்சி அடைகின்றன. இதன் பெரும் பலன்களை ராஜஸ்தான் பெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* பீமா சக்தி யோஜனா திட்டம் தொடக்கம்
அரியானாவின் பானிபட்டில் எல்ஐசியின் பீமா சக்தி யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அடுத்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் பெண் இன்சூரன்ஸ் ஏஜென்ட்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில் 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு கமிஷனுடன் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இதே போல குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசினார்.

The post கடந்த 10 ஆண்டில் பொருளாதாரம் இரண்டு மடங்கு வளர்ச்சி: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Rajasthan ,Jaipur ,Rising Rajasthan' Global Investors Conference ,Jaipur, Rajasthan ,Modi ,India ,
× RELATED விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை...