×

கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சென்டர் மீடியனை தாண்டி பஸ் மீது மோதல் டைல்ஸ் கடை உரிமையாளர் காயம்

 

திருப்பூர், டிச.10:திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் கரம்சிங் பட்டேல்(45). இவர் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று திருப்பூரில் இருந்து அவிநாசி நோக்கி காரில் வேகமாக சென்றுள்ளார்.அப்போது தண்ணீர்பந்தல் வளைவில் திரும்ப முடியாமல்,கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் நடுவே உள்ள சென்டர் மீடியனை தாண்டி சென்று ரோட்டின் மறுபுறம் கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது மோதியது.

விபத்தில் சிக்கியது சொகுசு கார் என்பதால் காரின் பாதுகாப்பு பலூன் வெளியேறியதில் கரம்சிங் பட்டேல் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த கரம்சிங் பட்டேலை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சென்டர் மீடியனை தாண்டி பஸ் மீது மோதல் டைல்ஸ் கடை உரிமையாளர் காயம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Karamsingh Patel ,Palayakkadu ,Oothukuli Road, Tirupur ,Avinasi ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!