- கீசலக்கரை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- மாயாகுளம் சேர்மத்தை வாசன் நடுநிலைப்பள்ளி
- Airwadi
- திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய இளைஞரணி
- தின மலர்
கீழக்கரை, டிச.10: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஏர்வாடி அருகே மாயாகுளம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயகுமார், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத்ராஜா, துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா உள்பட பலர் பங்கேற்றனர். திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் ராம், லட்சுமணன் ஏற்பாடு செய்தனர்.
The post கல்வி உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.