×

புதிய உபகரணங்கள் உள்பட அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடிக்கு பணிகள்

 

மதுரை, டிச. 10: மதுரை அரசு மருத்துவனையில் ஜப்பான் நாட்டு கூட்டுறவு முகமை நிறுவன ஒப்பந்தம் வாயிலாக ரூ.313 கோடியில் ‘டவர் பிளாக்’ கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதயபிரிவு, அவசரகால சிகிச்சை பிரிவு, ரேடியாலஜி பிரிவு உட்பட ஆறு தளங்களில் பல்வேறு வசதிகளுடன் இக்கட்டிடம் செயல்படுகிறது. கட்டிடத்தை பராமரிக்கும் நிறுவனம் மற்றும் பொதுப்பணித்துறை தரப்பில், அவ்வப்போது நோயாளிகள் மற்றும் டாக்டர்களின் தேவைக்கேற்ப மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது, கூடுதல் பணிகள் செய்ய ஒப்பந்தம் விடப்பட உள்ளது.

இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘தேசிய சுகாதார திட்ட இயக்குநரின் அறிவுறுத்தல் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையின்படி, ஜிகா கட்டிடத்தில் கூடுதல் பணிகள் மேற்கொள்ள வரும், 18ல் ஒப்பந்தம் விடப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூ.1.50 கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. புதிய உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்டவற்றுடன், பல்வேறு பராமரிப்பு பணிகளும் இப்பணிகளில் அடங்கும்’’ என்றனர்.

 

The post புதிய உபகரணங்கள் உள்பட அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடிக்கு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Government Hospital ,Madurai ,Tower Block ,Madurai Government Hospital ,Japanese Cooperative Agency ,Cardiology Department ,Emergency Department ,Radiology Department ,Dinakaran ,
× RELATED டூவீலர் திருடிய 2 பேர் கைது