×

திருவட்டார் கோயில் நகைகள் ஐகோர்ட் உத்தரவுப்படி ஆய்வு

குலசேகரம்: திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் நகைகள் கடந்த 1992 மற்றும் 1995 ஆண்டுகளில் திருடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருடப்பட்ட நகைகள் போலீசாரால் மீட்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளது. இந்நிலையில் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி நகைகள் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய திருவட்டாரை சேர்ந்த தங்கப்பன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் நகைகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதனை நியமித்தது.

இதனையடுத்து நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் நேற்று திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு வந்து ஐம்பொன் விக்ரகங்கள், கோயிலில் இருந்த சில நகைகள், சுவாமி அபிஷேகத்துக்குக்கு பயன்படுத்தும் வெள்ளிக் குடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் கோயில் நகைகள் பற்றிய ஆவணங்கள் யாரிடமாவது இருந்தால்நேரில் கொண்டு வந்து ஒப்படைத்தால் ஆய்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றும் ஆய்வு தொடரும் என்றார்.

The post திருவட்டார் கோயில் நகைகள் ஐகோர்ட் உத்தரவுப்படி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Thiruvatar ,Perumal ,
× RELATED சார்-பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு