டெல்லி : அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை ஒன்றிய அரசு தன்னிச்சையாக ஏலம் விடுவதற்கான சட்டத்திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது அம்பலம் ஆகி உள்ளது. 2023ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சுரங்க சட்டத்திருத்த மசோதாவை திமுக ஏன் தடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார் எடப்பாடி. சர்ச்சைக்குரிய சுரங்க சட்டத்திருத்த மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் சுரங்க சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்த நிலையில் அதிமுக மட்டும் ஆதரித்தது.
The post சுரங்க சட்டத்திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது அம்பலம் appeared first on Dinakaran.