×

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்: அதிகாலையில் பரபரப்பு

சென்னை: பெரம்பூரில் அறிவழகன் என்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஏ பிரிவு வகை (A Category) ரவுடி அறிவழகன். ரவுடி அறிவழகன் மீது 3 கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி அறிவழகன் கடந்த 8 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் பெரம்பூர் பனந்தோப்பு காலனி அருகே ரவுடி அறிவழகன் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ரவுடியை சுற்றி வளைத்தனர்.

அப்போது ரவுடி அறிவழகன் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார். இதனையடுத்து போலீசார் ரவுடி அறிவழகனை போலீசார் காலில், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த அவரை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரம்பூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்: அதிகாலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ilazhagan ,Perampur ,Vyasarpadi, Chennai ,
× RELATED சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்