சிவகங்கை, டிச.9: நெற்பயிரில் மகசூல் அதிகரிக்க நுண்ணுரம் இட வேளாண்துறை விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது:நெல் பயிருக்கு பேரூட்டங்களான தழை, மணி, சாம்பல் சத்துடன் நுண்ணூட்டங்களான இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற நுண்ணூட்டங்களும் இன்றியமையாததாகும்.
நெல் பயிரிடும் போது பேரூட்டச்சத்து உரங்களை மட்டுமே இடுவதால் நுண்ணூட்டச்சத்துக்கள் குறைந்து பயிரில் மகசூல் குறைகிறது. நுண்ணூட்டச்சத்து கிடைப்பதால் பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி, பேரூட்டச்சத்துக்களை உள்வாங்கும் தன்மை, அதிக சிம்புகள் வெடித்து தூர் கட்டுவது, அதிக மணி உற்பத்தியாகி மகசூல் அதிகரிப்பது உள்ளிட்ட நன்மைகள் ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் பயிர்களுக்கு நுண்ணுரம் இடவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நெற்பயிருக்கு நுண்ணுரம் வேளாண் துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.