×

தூய்மை பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்க கலெக்டர் ஆய்வு

திருப்புவனம், டிச.9: திருப்புவனத்தில் பிரமனூர்,பழையனூர் உட்பட 21 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வலது பிரதான கால்வாய் திருவரசன் படித்துறை அருகே தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் கால்வாயில் தடுப்பு சுவர் தீடிரென நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதனை ஒட்டியிருந்த தூய்மை பணியாளர்களின் மூன்று வீடுகள் இடிந்தன.

மேலும் பல வீடுகள் பழுதான இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன என்பதால், நேற்று முன்தினம் 18க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 70பேர் திருப்புவனம் நெல்முடிக்கரை மருது பாண்டியர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்பு மனைகள் வேண்டும். பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், எம்.எல்.ஏ தமிழரசியிடமும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் திருப்புவனம் பாக்கியா நகருக்கு அருகில் மருத மரம் பகுதியில் உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

The post தூய்மை பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்க கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Bramanur ,Pahayanur ,Tiruvarasan Padithura ,Dinakaran ,
× RELATED பன்றிகளால் பயிர்கள் நாசம் தமிழக அரசு அமைத்த குழு வயலில் ஆய்வு