திருவாரூர், டிச. 9: திருவாரூரில் பொதுசுகாதாரதுறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாள ர்களுக்காக நடைபெற்ற மரு த்துவ முகாமை கலெக்டர் சாரு துவக்கி வைத்தார். திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் திருவாரூர் நகராட்சி இணைந்து நடத்தும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிக்கொணர்வு தூய்மை பணியாளர்களுக்கான மாபெரும் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் துவக்க விழா கலெக்டர் சாரு தலைமையிலும், நாகை எம்.பி செல்வராஜ், எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் மருத்துவ முகாமை கலெக்டர் சாரு துவக்கி வைத்து சிகிச்சை முறைகளை நேரில் ஆய்வு செய்தார்.இதில் திருவாரூர் நகராட்சியை சேர்ந்த 160 தூய்மை பணியாளர்களும், கூத்தாநல்லூர் நகராட்சியினை சேர்ந்த 75 தூய்மை பணியாளர்களும் என மொத்தம் 235 பணியாளர்கள் பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர்கள் புவனப்பிரியாசெந்தில் (திருவாரூர்), பாத்திமா பஷிரா தாஜ் (கூத்தாநல்லூர்), நகராட்சி கமிஷ்னர்கள் தாமோதரன் (திருவாரூர்), கிருத்திகாஜோதி (கூத்தாநல்லூர்), பணிநியமன குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் திருவாரூர் கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.