×

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல் விளக்கு விற்பனை அமோகம் ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்

 

திருவாரூர், டிச. 9: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருநாள் விழாவானது ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழ க்கமாக இருந்து வருகிறது. பொதுவாக அனைத்து மாதங்களிலும் கார்த்திகை நட்சத்திரத்தின் போது பொது மக்கள் விரதம் இருந்து அதன்பின்னர் முருகன் கோயில்களில் தங்களது நேர்த்திகடனை செலு த்துவர். மேலும் தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை பெரிய கார்த்திக்கை தினமாக கருதி இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த நாளில் வீடுகளில் பெண்கள் அகல் விளக்கு கொண்டு தீப ஒளி ஏற்றி வீட்டின் வாசல், மாடம் உள்ளிட்ட பகுதிகளில் அகல் விளக்குகளை வைத்து ஜொலிக்க வைப்பர்.

மேலும் அவல் பொரி கொண்டு இறைவனுக்கு பூஜை செய்வதும் வழக்கம். மேலும் இந்த நாளில் கோயில்களில் சொக்க ப்பனை கொளுத்தும் நிக ழ்ச்சியும் நடைபெறும்.இந்நிலையில் இந்த விழாவானது வரும் 13ம் தேதி நடைபெறுவதையொ ட்டி திருவாரூர் நகரில் தங்களுக்கான அகல் விளக்குகளை வாங்கும் பணியில் பொது மக்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில் இந்த கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

The post கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல் விளக்கு விற்பனை அமோகம் ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Karthikai Deepa festival ,Tiruvarur ,Hindus ,Karthika Deepa Thirunal ,Karthika ,Akal ,Karthika deepa festival ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை