×

சீதையாக நடித்தது ஆசிர்வாதம்: கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி

ஐதராபாத்: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இப்படம் ராமாயணத்தை தழுவி உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரபாஸ், ‘இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இயக்குநர் ஓம் ராவத்துக்கு நன்றி. மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் இப்படத்தில் நடித்துள்ளேன். காரணம், இது சாதாரண கேரக்டர் கிடையாது. ராமர் வேடம் ஏற்றுள்ளதால், அதற்காக என்னை மனரீதியாக தயார் செய்துகொண்டு நடித்தேன். படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பட ஹீரோயின் கீர்த்தி சனோன், ‘பிரபாஸ் கடவுள் ராமரைப்போல எளிமையான மனிதர். மனதில் தோன்றியதை நேரடியாக பேசக்கூடியவர். படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. ஏனென்றால் சில நடிகர்களுக்கு மட்டுமே அவர்களது வாழ்நாளில் இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்த வேடத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என படக்குழு நம்பியதும் எனக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. மிகுந்த நேர்மையுடனும், நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் நடிக்க முயற்சித்தேன்.

எனக்கு படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. நான் கதையை புரிந்துகொண்டபின் படமாக்கப்படும்போது அந்த நம்பிக்கை இன்னும் எனக்குள் அதிகரித்தது’ என்றார்.‘படத்தின் டீசர் வெளியானபோது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது, டிரெய்லர் பார்த்துவிட்டு பலரும் பாராட்டுகிறார்கள். படம் வந்த பிறகு பலரும் இதை கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு இதில் உழைப்பை செலுத்தியிருக்கிறோம்’ என இயக்குனர் ஓம் ராவத் கூறினார்.

The post சீதையாக நடித்தது ஆசிர்வாதம்: கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabas ,Kierthi Chanone ,Saip Alikhan ,Om Rawat movement ,Hyderabad ,Kierthi Sanon ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்