- அங்கன்வாடி நிலையம்
- நாகர்கோவில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- ஆளூர் அங்கன்வாடி மையம்
- நாகர்கோவில் நகர திமுக இளைஞர் அணி
- அங்கன்வாடி மையம்
நாகர்கோவில், டிச. 8: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர திமுக இளைஞர் அணி சார்பில் ஆளூர் அங்கன்வாடி மையத்திற்கு தொலைக்காட்சி பெட்டி, கேஸ் அடுப்பு, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை அமைப்பாளர் அகமதுஷா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமா மகேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நாகர்கோவில் மாநகர செயலாளர் ஆனந்த், அயலக அணி துணைச்செயலாளர் பாபு வினிபிரட், மாமன்ற உறுப்பினர் தங்கராஜா, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் பஷீர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் சி.டி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அங்கன்வாடி மையத்திற்கு தொலைக்காட்சி பெட்டி appeared first on Dinakaran.