×

இந்தி பிரசார சபா பட்டமளிப்பு விழா: ஒன்றிய அமைச்சர் பங்கேற்பு

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தட்சிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவின் 83 வது பட்டமளிப்பு விழா பிரச்சார சபா வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தங்கப்பதக்கம் வாங்கியுள்ளவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பிரவீன் மற்றும் விஷார தேர்வுகளில் பட்டங்களை முடித்திருக்கக்கூடிய 8000 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இவர்களுள் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.

பட்டங்களை வழங்கிய பின்னர் ஒன்றிய அமைச்சர் சார்பானந்த சோனாவால் பேசியதாவது: நம்முடைய குறிக்கோள் இந்தி மொழியை உலக மொழியாக உருவாக்க வேண்டும் என்பதுதான். இந்தி மொழியில் உலகத்தின் பல மொழிகளுக்குச் சமமான சக்தி உள்ளது, இந்தியாவில் பிறந்த இந்த மொழி நமது கலாச்சாரத்திற்கும், தேசபக்திக்கும் அடிப்படையாக விளங்குகிறது. இது மனிதநேயத்தின் உணர்வுகளை தூண்டும் முக்கியமான கருவியாக உள்ளது. எனவே, இந்த மொழியின் மகத்துவத்தை உலகளவில் பரப்பிக்கொள்வதில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தி பிரசார சபா பட்டமளிப்பு விழா: ஒன்றிய அமைச்சர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Hindi Prasara Sabha Convocation Ceremony ,CHENNAI ,graduation ,Dakshina Bharat Hindi Prachar Sabha ,D. Nagar, Chennai ,Prachar Sabha ,Union Shipping Minister ,Charbananda Sona ,Hindi Prasara Sabha Graduation Ceremony ,
× RELATED அன்னை தெரசா நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா