×

நரிக்குடி அருகே வாலிபர் தற்கொலை

 

திருச்சுழி, டிச.8: நரிக்குடி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரிக்குடி அருகே வேம்பங்குடி காலனியை சேர்ந்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர் முத்திருளன் (30). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது மனைவி குழந்தைகளுடன் மறையூர் காலனி பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2 வருடத்திற்கும் மேலாக வேலைக்கு செல்லமால் முத்திருளன் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுவிற்கு அடிமையான நிலையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முத்திருளன், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நரிக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நரிக்குடி அருகே வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Narikudi ,Thiruchuzhi ,Muthrulan ,Vempangudi Colony ,
× RELATED தொடர் மழையால் கண்மாய் உடைந்து வெள்ளநீர் புகுந்து நெல் சாகுபடி பாதிப்பு