×

நடிகர் திலீப்புக்கு சபரிமலையில் விஐபி தரிசனம் கொடுத்தது ஏன்?


திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று முன்தினம் சபரிமலை வந்து இரவு நடை சாத்தும்போது ஹரிவராசனம் பாடல் இசைத்து முடியும் வரை முன் வரிசையில் நின்றிருந்தார். திலீப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் இந்த நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற தேவசம் போர்டு அமர்வு நீதிபதிகளான அனில் கே. நரேந்திரன் மற்றும் முரளி கிருஷ்ணா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர். “சபரிமலையில் விஐபி தரிசனத்துக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதை மீறி நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேவசம் போர்டு உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

The post நடிகர் திலீப்புக்கு சபரிமலையில் விஐபி தரிசனம் கொடுத்தது ஏன்? appeared first on Dinakaran.

Tags : Dilip ,Sabarimala ,Thiruvananthapuram ,Mundinam Sabarimala ,Harivarasanam ,High Court of Justice ,Thiruvitangur Devasam Board ,
× RELATED பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் மண்டல பூஜை: நடை சாத்தப்பட்டது