- பாம்புகள்
- திருவாடானை
- தீயணைப்பு துறை
- சினேகவல்லிபுரம்
- திருவாடானை தீயணைப்பு துறை
- வடிவேலு
- Thiruvadan
- தின மலர்
திருவாடானை, டிச.7: திருவாடானை அருகே வீடுகளுக்குள் புகுந்த பாம்புகளை, தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். திருவாடானை – சினேகவல்லிபுரம் பகுதியில் வடிவேலு என்பவரது வீட்டிற்குள் பாம்பு இருப்பதாக திருவாடானை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டிற்குள் பதுங்கி இருந்த கொடிய விஷத்தன்மை கொண்ட சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை உயிருடன் லாவகமாகப் பிடித்து காட்டுப் பகுதிக்குள் கொண்டுபோய் விட்டுச்சென்றனர். அதேபோல் திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியில் மாரிமுத்து என்பவரது வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பையும், தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர்.
The post திருவாடானை அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்புகள் பிடிபட்டன appeared first on Dinakaran.