பழநி, டிச. 7: பழநி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பக்தர்களுக்காக அடிவார பகுதியில் ஏராளமான தற்காலிக உணவு கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இதில் பல கடைகளில் வணிக சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ பழநி அடிவார கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பழநி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள், வணிக வளாகங்கள், பேக்கரிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றனர்.
The post கடைகளில் வீட்டு சிலிண்டர் பயன்படுத்தினால் நடவடிக்கை: பழநி வருவாய் துறையினர் எச்சரிக்கை appeared first on Dinakaran.