×

வத்தலக்குண்டு அருகே கல் குவாரியில் ஆய்வு

வத்தலக்குண்டு, டிச. 7: வத்தலக்குண்டு அருகே விருவீடு ஊராட்சி மேலஅச்சனம்பட்டி பகுதியில் வைகை அணையிலிருந்து விருவீடு பகுதிக்கும், உசிலம்பட்டி பகுதிக்கும் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் 58ம் கால்வாய் செல்கிறது. இந்த பகுதியில் ஒரு கல் குவாரி செயல்பட்டு வந்தது. குவாரியில் கல் உடைக்க வெடி வைக்கும் போது 58ம் கால்வாய் அதிர்வு ஏற்பட்டு சேதமடைய வாய்ப்புள்ளதாக பாசன விவசாயிகள் புகார் செய்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் கல் குவாரி நடத்த தடை விதித்தார். தொடர்ந்து இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை சம்பந்தப்பட்ட கல் குவாரி பகுதியில் மண்ணியல் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களை வைத்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி நேற்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குமார் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் அந்த கல் குவாரி பகுதியில் ஆய்வு நடத்தினர்.

The post வத்தலக்குண்டு அருகே கல் குவாரியில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Wattalakundu ,Vatthalakundu ,Viriveedu ,Usilampatti ,Vaigai Dam ,Melachanambatti ,Virueedu Panchayat ,Stone Quarry ,Dinakaran ,
× RELATED வத்தலகுண்டு அருகே பண்ணையில் தீவிபத்து: 3000 கோழிகள் கருகின