×

திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்

 

ஊட்டி, டிச.7: நீலகிரி திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடக்கிறது. நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் 8ம் தேதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் மாவட்ட கழக அலுவலகம், ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் (நிர்வாக பணி, சமூக வலைதளம் மற்றும் மகளிர்) ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.கூட்டத்தில், வரும் 22ம் தேதி கோவையில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெறும் நீலகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய கோவை மண்டல ஆய்வு கூட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Ooty ,Nilgiri DMK IT ,Nilgiri District ,DMK Secretary ,Mubarak ,DMK Information Technology Team Meeting ,DMK Information ,Technology Team ,Dinakaran ,
× RELATED ஊட்டி சேரங்கிராஸ் பகுதியில்...