×

மாயாபுரம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதியில் தவிப்பு

 

பாலக்காடு, டிச. 10: தோணி வனச்சரகத்திற்கு உட்பட்ட மாயாபுரம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பாலக்காடு மாவட்டம் தோணி வனத்துறை அலுவலகத்தை அடுத்த மாயாபுரம், அரிமணி, மூலம் பாடம், உம்மிணி ஆகிய இடங்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் வளர்த்து வரும் வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடு, கோழி மற்றும் நாய்களை சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. இதனால் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே நடமாட முடியாமல் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர். மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். தோணி காட்டுப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், காட்டு மாடுகள், மான்கள், கடமான்கள், குரங்குகள், காட்டு பன்றிகள் மற்றும் மயில்கள் கிராம பகுதியில் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் தோட்டப்பயிர் அதிகளவில் சேதமடைந்தது.

இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தோணி பகுதிகளில் நடமாடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post மாயாபுரம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதியில் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mayapura ,Palakkad ,Dhoni Forest ,Palakkad District Dhani Forestry Office ,Arimani ,By Badam ,Ummini ,Dinakaran ,
× RELATED தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி