- யூனியன் ஊராட்சி
- புது தில்லி
- யூனியன் அரசு
- நுகர்வோர் விவகாரங்கள்
- நிதி கரே
- CII ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி மாநாடு
- தில்லி
- யூனியன் நுகர்வோர் விவகாரங்கள் துறை
- தின மலர்
புதுடெல்லி: தங்கக் கட்டிகளுக்கு ஹால்மார்க் முத்திரை போடுவதை கட்டாயமாக்கும் திட்டம் குறித்து ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருவதாக நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சிஐஐ ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி மாநாட்டில் ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே கலந்து கொண்டுபேசியதாவது, ‘‘மக்கள் தரமான மற்றும் துல்லியமான தயாரிப்புக்களை பெறுவதை உறுதி செய்வதன் மூலமாக நுகர்வோரின் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். ரத்தினங்கள் மற்றும் ஜூவல்லரி துறையானது நமது பொருளாதாரத்தில் ஒரு முக்கிய தூணாகும். இது ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுக்கும் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது.
கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தொடங்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருட்களுக்கான ஹால்மார்க் கட்டாயம் என்ற திட்டமானது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 40கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் மூலமாக ஹால்மார்க் முத்திரையிடப்பட்டுள்ளன. இது சந்தையில் நுகர்வோருக்கு அதிக நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றது. தங்கக்கட்டிகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவதை கட்டாயமாக்குவதற்கான ஒரு திட்டம் உள்ளது. இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது” என்றார்.
The post தங்கக் கட்டிகளுக்கு ஹால்மார்க் கட்டாயம்: ஒன்றிய அரசு ஆலோசனை appeared first on Dinakaran.