- அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு
- ஜெயலட்சுமி
- சுதாகர்
- சென்னை
- இளையராஜா
- காலாண்டுகளில்
- கச்சேரி சாலை, மயிலாப்பூர்
- சென்னை பெருநகர காவல் துறை
- அடையார்
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு
- இன்ஸ்பெக்டர்
- தின மலர்
சென்னை: மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்த உதவி ஆய்வாளர் இளையராஜா. தற்போது சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் குடியிருப்பின் கீழ் தளத்தில் பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வசிக்கிறார். இருவருக்கும் குடியிருப்பில் உள்ள காலி இடம் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் இளையராஜாவுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பைக் மற்றும் அவரது மனைவியின் ஸ்கூட்டரை ஜெயலட்சுமி மற்றும் அவரது கணவரும் ஓய்வு பெற்ற டிஎஸ்பியான சவுந்தர்ராஜன் சேதப்படுத்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.
இதுகுறித்து இளையராஜா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்டையில் பெண் இன்ஸ்பெக்டர் தனது கணவர் மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு வாகனத்தை சேதப்படுத்தி ஒழிங்கினமாக செயல்பட்டதாக சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அதற்கான உத்தரவும் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியிடம் வழங்கப்பட்டுள்ளது.
The post அரசு வாகனத்தை சேதப்படுத்திய விவகாரம்; அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சஸ்பெண்ட்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் நடவடிக்கை appeared first on Dinakaran.