×

திருச்சியில் வட்டமடித்த மலேசிய விமானம் 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு


திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு தனியார் விமானம் வந்தது. திருச்சி விமான நிலைய ஓடுதளத்தில் இறங்குவதற்கான சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் அந்த விமானம் திருச்சி வான்பரப்பில் 5க்கும் மேற்பட்ட முறை வட்டமடித்தபடி பறந்தது. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்கு தரையிறங்கியது. இதையடுத்து இரவு 11.30மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டு செல்ல விமானம் தயாரானது.

அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

The post திருச்சியில் வட்டமடித்த மலேசிய விமானம் 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy International Airport ,Kuala Lumpur ,Malaysia ,Trichy airport ,
× RELATED திருச்சியில் இருந்து மலேசியா...