திருமலை: கர்நாடகா மாநிலம், கலபுர்கி தாலுகா சேடம் நகரை சேர்ந்தவர் கிஷோர் குமார். இவரது மகள் தனுஜா(20). இவர் சித்ரதுர்காவில் நீட் நுழைவுத்தேர்வுக்கு படித்து வந்தார். இந்நிலையில், தனுஜா கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்று மீண்டும் சித்ரதுர்கா திரும்பினார். இதற்கிடையில், தனுஜா நீட் தேர்வு எழுதியுள்ளார் அதில், மதிப்பெண் குறைவானதால் சீட் கிடைக்காமல் 3வது கவுன்சலிங் வரை காத்திருந்தார். ஒரு கட்டத்தில் மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்த அவர் தன் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஓன்று அனுப்பி இருந்தார்.
அதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உள்ளூர் போலீசாரிம் புகார் அளித்தனர். இந்நிலையில், மீண்டும் தனுஜா ரயிலில் சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு புறப்பட்டார். ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், ராயதுர்கம் பைதோட்டா அருகே நேற்று முன்தினம் சென்றபோது அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மருத்துவ சீட் கிடைக்காததால் விரக்தி நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை appeared first on Dinakaran.