×

மாணவனிடம் செல்போன் பறிப்பு

மாதவரம்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 54வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (19), மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வரும் இவர், நேற்று அதிகாலை 4 மணியளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், விஷ்ணு கையில் வைத்திருந்த விலை மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post மாணவனிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Vishnu ,54th ,Vyasarbadi Sathyamurthi Nagar ,Meenhur ,Vyasarpadi Sathyamurthi Nagar Main Road ,Dinakaran ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...