×

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரித்ததாக புகாரில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு

பொன்னேரி: சென்னை கண்ணதாசன் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(74) என்பவர், செங்குன்றம் அடுத்துள்ள புள்ளிலைன் செல்வ விநாயகர் கோயில் நகரில் 1800 சதுர அடியில் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில், தனது நிலத்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் விற்றதாகவும், இதுதொடர்பாக கேட்டபோது அவர் தன்னை மிரட்டியதாகவும் ராமகிருஷ்ணன் செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில், ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜேந்திரன் பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மாஜிஸ்திரேட் அய்யப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.நந்தகோபாலன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ராஜேந்திரன் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post போலி ஆவணம் மூலம் நிலம் அபகரித்ததாக புகாரில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Ramakrishnan ,Kannadasan Nagar, Chennai ,Selva Vinayagar Koil Nagar, Dotted Line ,Senkunram ,Rajendran ,Achinchiwaka ,Dinakaran ,
× RELATED நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற...