×

பதிவுத்துறையில் நேற்று ஒரே நாளில் ரூ.238.15 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: பதிவுத்துறையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் ரூ.238.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். கார்த்திகை மாத சுப முகூர்த்த நாளை ஒட்டி நேற்று கூடுதலாக 50 டோக்கன்கள் வழங்கப்பட்டன. பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நவம்பரில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஈட்டப்பட்ட வருவாயைவிட இந்த ஆண்டு நவம்பரில் ரூ.301.87 கோடி கூடுதலாக ஈட்டியுள்ளது.

The post பதிவுத்துறையில் நேற்று ஒரே நாளில் ரூ.238.15 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chennai ,SUBHA MUHURTHA DAY ,KARTHIGAI ,Dinakaran ,
× RELATED பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசுக்கு...