டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை பெறுவதற்காக 4 மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அனைவரும் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊர்வலமாக சென்று எம்.பி.க்கள் ‘அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?’ என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடருக்கு நேற்று வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் “மோடியும் அதானியும் ஒன்று” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
The post அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.